News October 29, 2025

இன்று IND vs AUS முதல் டி20 போட்டி

image

ஆஸி.,வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தொடங்குகிறது. முன்னதாக, கில் தலைமையில் விளையாடிய 3 ODI போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் ஆஸி., கைப்பற்றியது. எனவே, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்களது பிளேயிங் 11-ஐ கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News October 29, 2025

நீதிமன்றம் அனுமதித்தால் விஜய் பிரசாரம் தொடரும்: தவெக

image

நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் விஜய்யின் பிரசாரம் தொடங்கும் என தவெகவின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் அடுத்தகட்ட பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஒருமாதமாக வீட்டிலேயே முடங்கியிருந்த விஜய், விரைவில் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 29, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. தமிழக அரசு தகவல்

image

2026 பொங்கல் சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ₹10,000 கோடி வரை செலவாகும் என்பதால், நிதி ஆதாரத்தை தயார் செய்யும் நடவடிக்கையில் நிதித்துறை இறங்கியுள்ளதாம். இதுகுறித்து, CM ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைய உள்ளனர். SHARE IT

News October 29, 2025

பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

image

நகராட்சி நிர்வாக துறையில் <<18136226>>2,538 பேரிடம் பணம்<<>> வாங்கி கொண்டு பணி வழங்கியதாக கூறிய ED-ன் புகாரை அமைச்சர் KN நேரு மறுத்துள்ளார். அவரது விளக்கத்தில், *அரசுக்கு களங்கம் ஏற்படுத்த ED பொய் கூறுகிறது. *20.9.2024-ல் முறைப்படி அண்ணா பல்கலை., மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் முறையாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்வர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.

error: Content is protected !!