News December 20, 2024
WIஐ துவம்சம் செய்த IND அணி

WI மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், IND அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 77 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய WI அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Similar News
News September 7, 2025
EPSஐ வேட்பாளராக ஏற்க முடியாது: TTV திட்டவட்டம்

தன்னை சந்திக்கவே EPS அச்சப்படுவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். EPS-ஐ எதிர்த்து கட்சி தொடங்கிய தான், அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் எனவும் கேள்வி எழுப்பினார். நயினார் தன்னையும், OPS-ஐயும் திட்டமிட்டு அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். <<17637974>>OPS செங்கோட்டையனை <<>>சந்திப்பதாக கூறிய நிலையில், TTV-யும் அவரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிய கூட்டணி உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
சந்திர கிரகணத்தில் தானம் செய்தால் இவ்ளோ நல்லதா!

கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்துசேரும் என்ற ஐதீகம் உள்ளது.
*வெள்ளியை தானம் செய்வதால், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் & செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்.
*அரிசி சந்திரனுடன் தொடர்புடையதால், அரிசியை தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
*பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். இதனால் புகழ், மன அமைதி கிடைக்கும். SHARE IT.
News September 7, 2025
புடின் கீவ்வுக்கு வரலாம்: ஜெலன்ஸ்கி அழைப்பு

புடின் விடுத்த <<17626558>>அழைப்பை நிராகரித்த <<>>ஜெலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு ரஷ்ய அதிபர் வரலாம் என பதில் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், செப்டம்பரின் முதல் 5 நாள்களில் மட்டும் 1,300 டிரோன்கள், 900 குண்டுகள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி பட்டியலிட்டுள்ளார். இதன்மூலம், பேச்சுவார்த்தை நடக்க தற்போது வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.