News June 28, 2024
IND சுழலில் தடுமாறும் ENG

T20 WC அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி, ENG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வருகின்றனர். 3 ஓவர்களை வீசிய அக்ஷர் படேல், 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் போட்ட 2ஆவது ஓவரிலேயே 2 ரன் அடித்திருந்த சாம் கரணை வெளியேற்றினார். 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு ENG 53 ரன்களை எடுத்துள்ளது.
Similar News
News December 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 545 ▶குறள்: இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
News December 10, 2025
8 ஆண்டுகளுக்கு பின் Ring-ல் ஏறும் கிரேட் காளி!

WWE பிரியர்களுக்கு ‘தி கிரேட் காளி’ என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அவர் ஓய்வு பெற்ற 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது மீண்டும் Ring-ல் களமிறங்க உள்ளார். ஆனால் இந்த முறை WWE-ல் அல்ல, மாறாக அவரது சொந்த நிறுவனமான CWE-ல்.
2026 ஜனவரி 25-ல் போட்டி நடைபெற உள்ளது. காளி சண்டை போடுவதை பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
News December 10, 2025
அரசு திட்டங்கள் மூலம் நன்கொடை வசூலித்த பாஜக!

மத்திய அரசு திட்டங்களின் பெயரைச் சொல்லி பாஜக நன்கொடை வசூலித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஸ்வச் பாரத்’, ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’, ‘கிஷான் சேவா’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி வரை, சொந்த கட்சிக்கு பாஜக நிதி திரட்டியுள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது. அரசு திட்டங்கள் மூலம் நன்கொடை வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் அரசு பதிலளித்துள்ளது.


