News October 24, 2024
IND-NZ: அரைசதம் கடந்த கான்வே

IND அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் NZ அணி நிதானமாக விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த NZ அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்களிலும், வில் யங் 18 ரன்களிலும் அஸ்வின் சூழலில் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது வரை NZ 39 ஒவர்களில் 127/2 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 70*, ரவீந்திரா 17* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Similar News
News January 15, 2026
ஒற்றுமையை பிரதிபலிக்கும் பொங்கல்: PM மோடி

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களை ஒன்றிணைத்து, நம் சமூகத்தில் அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகையை காண்பது மகிழ்ச்சி. வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழைப்பின் மரியாதையையும் நினைவூட்டும் இத்திருநாள் நமது பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது. இப்பொங்கல், அனைவருக்கும் புதிய உற்சாகத்தை வழங்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
News January 15, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டு வரும் பெண்களுக்கு சற்றுமுன் தித்திப்பான செய்தி வெளியாகியுள்ளது. ஆம்! பொங்கல் நாளில் தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை முதலே 1.40 கோடி குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் 29-வது தவணையாக ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. உங்க செல்போனுக்கு மெசேஜ் வந்துவிட்டதா என்பதை செக் பண்ணுங்க!
News January 15, 2026
நீங்க இன்று 2 பொங்கல் வைப்பீங்களா?

பொங்கல் நாளில், படையலுக்கான பொங்கல் 2 வகைகளாக வைக்கப்படும். பச்சரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் வெண் பொங்கல் ஒரு பானையிலும், சர்க்கரை பொங்கல் மற்றொரு பானையிலும் வைக்கப்படும். சர்க்கரை பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். வெண் பொங்கல் இறைவனுக்கும், முன்னோர்களுக்கும் படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இது அறுவடை, குடும்பம் & செல்வ செழிப்பையும் குறிக்கிறது. நீங்க எத்தனை பானை பொங்கல் வைப்பீங்க?


