News December 8, 2024
IND-BAN Under 19: இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு

Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் ராஜ், செட்டன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற்று 9வது முறையாக கோப்பையை தூக்குமா?
Similar News
News March 5, 2026
ஒரேநாளில் ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

1 கிராம் வெள்ளி இன்று (மார்ச் 5) மாற்றமின்றி ₹295-க்கும், 1 கிலோ ₹2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சமாக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் ₹30,000 அளவுக்கு குறைந்து ₹2.95 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
ஹோட்டல் பணிப்பெண் தவறாக நடந்த பாகிஸ்தான் வீரர்!

PAK கிரிக்கெட் வீரர் ஒருவர் மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கையின் கண்டி பகுதியில் T20I WC-க்காக தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், ஹோட்டல் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. அச்சத்தில் அப்பெண் கத்தி கூச்சலிட்டதில், ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டதாக கூறப்படுகிறது. அந்த வீரர் சார்பில் அவரது மேனஜர் மன்னிப்பு கேட்டாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
சற்றுமுன்: நடிகை லதா அதிமுகவில் இணைந்தார்

பிரபல நடிகை லதா, EPS முன்னிலையில் சற்றுமுன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் கட்சித் தொடங்கிய போதே 3-வது பெண் உறுப்பினராக அதிமுகவில் இணைந்தவர். ஜெ., மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக உடைந்தபோது, கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவரை, வரும் தேர்தலில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது..


