News December 6, 2024
IND-AUS: இந்திய அணி ஆல்அவுட்

AUSக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் IND 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸி.,வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (37), நிதிஷ்(42) ரன்கள் எடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி(7), ரோஹித் (3) ஆகியோர் சொதப்பினர். AUS அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.
Similar News
News April 30, 2025
முன்னாள் பாக். MP இந்தியாவில் இருக்க அனுமதி

ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் முன்னாள் பாக். MP தபயா ராம், இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், 6 பேருக்கு மட்டுமே இந்திய குடியுரிமை உள்ளது. எஞ்சிய 28 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் மத அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக, அவர் கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தார்.
News April 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 322 ▶குறள்: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. ▶பொருள்: இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.
News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.