News December 7, 2024

Ind-Aus Day 2: விற்று தீர்ந்த டிக்கெட்கள்

image

இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2ஆம் நாளான இன்று அடிலெய்ட் மைதானத்தில் உள்ள 53,500 டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. பகல்-இரவு(பிங்க் பால்) ஆட்டம் மற்றும் வார இறுதி நாள் என்பதால் ஸ்டேடியத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முதல் நாளான நேற்றும் 50,186 ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.

Similar News

News March 9, 2026

கில்லியில் விஜய்-த்ரிஷாவுக்கு பதில் இவர்களா?

image

விஜய் – த்ரிஷா முதன்முதலாக ஒன்றாக நடித்த படம் ’கில்லி’. இதில் இவர்களுக்கு பதில் வேறு இருவர் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. இப்படத்துக்கான முதல் சாய்ஸாக விக்ரமும், ஜோதிகாவும்தான் இருந்தனராம். ஆனால், அந்த சமயத்தில் இருவருமே பிசியாக இருந்திருக்கின்றனர். இதனால் இருவராலும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் இவர்களை விடுத்து விஜய்யையும் த்ரிஷாவையும் நடிக்க வைக்க டைரக்டர் தரணி முடிவெடுத்திருக்கிறார்.

News March 9, 2026

உங்கள் மகளுக்கு 21 வயதில் ₹60 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்

image

பெண் பிள்ளை வைத்திருப்போரின் பெரிய கவலையே எப்படி அவர்களின் எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பது என்பதுதான். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் சேர்ந்தால் மகளுக்கு 21 வயது ஆகும்போது அதிகபட்சமாக ₹69,27,578 லட்சம் கிடைக்கும். இதில் ₹250 – ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் அருகில் இருக்கும் வங்கியை அணுகி இத்திட்டத்தில் சேருங்கள். SHARE.

News March 9, 2026

4 வங்கிகளில் வட்டி உயர்வு.. மகிழ்ச்சி அறிவிப்பு

image

நடப்பு மார்ச் மாதத்தில் 4 வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான(Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. HDFC வங்கி ₹3 கோடிக்கு உள்பட்ட 5 ஆண்டுகள் FD-க்கு 7.50% வரையும், YES பேங்க், பந்தன் ஆகிய வங்கிகள் 7.75% வரையும் வட்டியை உயர்த்தியுள்ளன. சூர்யோதய் சிறு நிதி வங்கி பொதுமக்களுக்கு 7.90%, மூத்த குடிமக்களுக்கு 8.10% ஆக உயர்த்தியுள்ளது. மார்ச் 6-ம் தேதி முதல் இந்த வட்டி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

error: Content is protected !!