News November 15, 2024
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு – காரணம் என்ன?

நாட்டின் தலைநகரான டெல்லி பெரும் காற்று மாசினால் சிக்கி தவிக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன * அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவின் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் புகையாக டெல்லியை சூழ்கிறது * பனிக்காலத்தில் உறைந்து போகும் மாநிலத்தின் சீதோஷ்ண நிலை * தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள்தொகையும், அதிகரிக்கும் வாகன பயன்பாடும் * கட்டுமான பணிகளால் வெளியேறும் புகை தொடர்ந்து நகரிலேயே தங்கிவிடுவது.
Similar News
News August 26, 2025
AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 26, 2025
சற்றுமுன்: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
News August 26, 2025
டிரம்ப் மிரட்டல்.. இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஆப்பிள்

ஐபோன் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான், இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் நாளை முதல் 50% வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால், டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய போவதில்லை என ஆப்பிள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவில் தங்களுடைய உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.