News April 29, 2024
உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் முக்கிய ஊழல் முறைகேடுகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறைக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்பேரில், நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Similar News
News August 13, 2025
ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள்.. போனி கபூர் உருக்கம்

1990-ல் ஸ்ரீதேவியின் 27-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்திருக்கிறது. அப்போது வயது ஏறினாலும், இளமை குறையவில்லை என்பதை குறிப்பதற்காக அவரிடம் ’26-வது பிறந்தநாள் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார் போனி கபூர். ஆனால் ஸ்ரீதேவியோ போனி கபூர் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டார். இச்சம்பவத்தை ஸ்ரீதேவியின் 62-வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.
News August 13, 2025
விமர்சிக்காதீங்க, ஆதரவு தாங்க: சேகர் பாபு

திமுக அளித்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை என்பதே தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்படாத பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை விமர்சிக்காமல், அதன் நன்மைகளை புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 13, 2025
தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தும் அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது தவறு என்றும் தெரிவித்துள்ளது. போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவ்வாறு கூறியுள்ளது.