News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 21, 2025
தனியார் பள்ளிகளில் வரப்போகும் மாற்றம்..!

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் நாளை முதல் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. மாணவர்களே, ரெடியா?
News December 21, 2025
மெகா வெற்றியை நோக்கி முன்னேறும் பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மெகா வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 246 நகராட்சி மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கான தேர்தலில் மகாயுதி 214, காங்., தலைமையிலான மகா விகாஸ் அகாடி 52 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அடுத்த மாதம் பிரஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News December 21, 2025
₹67.09 லட்சம் கோடி சொத்துடன் வரலாறு படைத்த மஸ்க்!

உலக வரலாற்றில் $700 பில்லியன் நிகர சொத்து மதிப்பை கடந்த முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார். டெஸ்லா நிறுவனம் மீதான வழக்கில், டெலாவேர் சுப்ரீம் கோர்ட் அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியதால், சொத்து மதிப்பு $749 பில்லியனாக (₹67.09 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 2-வது வாரத்தில் $600 பில்லியனாக இருந்த சொத்து மதிப்பு ஒரே வாரத்தில், $700 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


