News October 11, 2025

திருமாவுக்கு பாதுகாப்பை அதிகரியுங்கள்: கமல்ஹாசன்

image

திருமாவளவன் சென்ற கார் மறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், திருமாவின் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். பா.ரஞ்சித்தின் இதே கருத்துக்கு கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், இது திட்டமிட்ட சதி என்ற திருமாவின் சந்தேகத்திலும் நியாயம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Similar News

News March 4, 2026

வள்ளலார் பொன்மொழிகள்

image

*பசிபோக்குவதே ஜீவகாருண்யம் *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள் *பல்லாயிரம் சொற்களை உபசாரமாகப் பேசுவதைவிட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார் *நல்லோர் மனதை நடுங்கச் செய்யக் கூடாது. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தக் கூடாது. நட்புக்கு வஞ்சகம் செய்யக் கூடாது.

News March 4, 2026

பிறந்த ஊரிலேயே புதைக்கப்படும் கமேனி?

image

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள இமாம் ரேசா புனித தளத்தில் கமேனியின் உடல் புதைக்கப்படவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. அதேஇடத்தில் தான் கமேனியின் தந்தை கல்லறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கமேனியின் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை ஈரான் அரசு செய்து வருகிறது.

News March 4, 2026

தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரிப்பு: ரவிக்குமார் MP

image

சாதி ரீதியான மோதல்களை தடுப்பதில் காவல்துறை மெத்தனமாக இருக்கக் கூடாது என ரவிக்குமார் MP தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சாதி வெறியாட்டம் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இதற்கு பாஜக போன்ற மதவாத சக்திகள் வலுப்பெற்றதே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும், சாதிய வன்கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முழுமையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!