News August 26, 2025

ஒரேநாளில் ₹6000 வரை உயர்வு.. மக்கள் திண்டாட்டம்

image

விடிந்தால் வி​நாயகர் சதுர்த்தி. மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் பர்ஸை காலி செய்யும் வகையில், ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்ல அதிகபட்சமாக ₹6,000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. திருச்சி செல்ல ₹4,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வதை கட்டுப்படுத்த தீர்வே இல்லையா?

Similar News

News August 26, 2025

LCU-ல் இணைந்த மாஸ் ஹீரோ

image

நடிகர் ரவி மோகன் LCU-வில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் எழுதிய கதையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் ரவி மோகனும் நடிக்கிறாராம். இதை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 3 படங்களிலும் அவருடைய கதாபாத்திரம் இடம்பெறும் என லோகேஷ் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ரவி மோகனின் கதாபாத்திரத்தை லோகேஷ் மாஸாக வடிவமைத்துள்ளாராம்.

News August 26, 2025

கோடிக்கணக்கில் இழந்த கோலி, தோனி, ரோஹித்

image

ஆன்லைன் கேமிங் மசோதாவால் பிசிசிஐ மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழக்கின்றனர். கோலி, தோனி உட்பட பல வீரர்கள் Dream 11, MPL ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு, விளம்பரங்களில் நடித்து கோடிகளில் வருவாய் ஈட்டி வந்தனர். கேமிங் மசோதா அமலால் கோலி ₹12 கோடியும், ரோஹித் மற்றும் தோனி தலா ₹6 கோடியும், இதர வீரர்கள் தலா ₹1-2 கோடியும் என மொத்தமாக ஆண்டுக்கு ₹150 கோடி இழக்கின்றனர்.

News August 26, 2025

Tech Talk: உங்கள் ஃபோனை Security Camera-வாக மாற்றணுமா?

image

உங்களிடம் பழைய ஃபோன் இருந்தால் அதை விற்றுவிடாதீர்கள். அந்த ஃபோனை Security Camera-வாக மாற்ற முடியும். ▶முதலில் பழைய ஃபோனிலும், தற்போது பயன்படுத்தும் ஃபோனிலும் ‘Alfred’ செயலியை டவுன்லோடு செய்யுங்கள் ▶ 2 ஃபோன்களிலும் ஒரே Gmail Id இருக்கவேண்டும் ▶பழைய ஃபோனில் ‘Add a Camera’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் QR code காட்டும் ▶அதை புதிய ஃபோனில் Scan செய்தால் போதும் Security Camera ரெடி! SHARE.

error: Content is protected !!