News April 27, 2024
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 அதிகரித்து, ₹54,160க்கும், கிராமுக்கு ₹15 அதிகரித்து ₹6,770க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹87.50க்கும், கிலோவிற்கு ₹87,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 14, 2025
பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை

கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 1 நாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 18 – 52 வயதுள்ள பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஒருவேளை குறிப்பிட்ட மாதத்தில் விடுமுறையை எடுக்காவிட்டால், அதை சேர்த்து வைத்து அடுத்த மாதம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் இச்சட்டம் வந்தால் எப்படி இருக்கும்?
News November 14, 2025
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இந்த சாறில் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். அனைவருக்கும் பயனளிக்கட்டுமே, SHARE THIS.
News November 14, 2025
தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $20 குறைந்து $4,185-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நேற்று (நவ.13) மட்டும் சவரனுக்கு ₹2,400 அதிகரித்து, ₹95,200-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


