News June 16, 2024
மீன்களின் விலை உயர்வு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால், சந்தைகளில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. எனினும், ஞாயிற்றுக்கிழமை காரணமாக இன்று மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னை காசிமேட்டில் வஞ்சரம் 1 கிலோ ₹1,000- 1,200, இறால் ₹400- 1,500, பாறை ₹350- 500, சங்கரா ₹300-500, வெளவால் ₹300- 600, நெத்திலி ₹200 வரை விற்பனையாகிறது. விலையை பொருட்படுத்தாது மக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
Similar News
News November 13, 2025
மெட்ரோ ரயில்வே டிராக்கில் சோலார் பேனல்கள்

நாட்டிலேயே முதல்முறையாக, RRTS (அ) மெட்ரோ ரயில்வே டிராக்குகளில் சோலார் பேனல்களை வைத்து மின் உற்பத்தி செய்யும் ‘Solar on track’ எனும் திட்டம், உ.பி.,யின் துஹாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 17,500 kWh எரிசக்தியை உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டு முழுவதும் 16 டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்க முடியும். 550 Wp திறன் கொண்ட 28 உயர்திறன் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.
News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
News November 13, 2025
RCB அணியை வாங்குகிறதா ஹோம்பாலே பிலிம்ஸ்?

நடப்பு IPL சாம்பியன் RCB அணி ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த அணியை யார் வாங்குவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், RCB அணியை வாங்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. KGF, காந்தாரா படங்களை ஹோம்பாலே பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஹோம்பாலே பிலிம்ஸ் RCB-ஐ வாங்கினால் அந்த அணிக்கு என்ன பெயர் வைக்கலாம்’னு சொல்லுங்க?


