News March 19, 2024
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,320ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News July 7, 2025
50 ஆபாச வீடியோக்கள்… சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கர்நாடகாவில் இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் மீது கல் வீசியதாக சமித் ராஜூ கைதாகி ஜாமினில் வெளியே வந்தார். கைதானபோது அவரது செல்போனை கைப்பற்றி போலீஸ் விசாரித்ததில் இந்த பகீர் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை விசாரிக்க போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News July 7, 2025
ஒரே வீட்டில் இப்படி இருந்தால் சமூகநீதி எங்கு இருக்கும்?

சமூகநீதியும், சாதிய ஒழிப்பும் வெறும் சொல்லாகவே இன்றும் இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே வீட்டில் முதல்வர், துணை முதல்வர் இருக்கும்போது எப்படி சமூகநீதி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் இன்று அறிவித்த நிலையில், சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
News July 7, 2025
கூட்டுறவு வங்கிகள் நகைக் கடன் வழங்க மறுப்பா?

பாமர மக்களின் அவசர நிதித் தேவையை தீர்த்து வைப்பதே நகைக் கடன் தான். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 3 மாதங்களாக நகைக் கடன் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், நிதி நெருக்கடி காரணமாக கடன் வழங்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உங்க ஏரியாவுல நகைக் கடன் கிடைக்குதா?