News September 22, 2025

வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.

Similar News

News September 22, 2025

மயிலாடுதுறை: தீபாவளி போனஸ் வேணுமா?

image

மயிலாடுதுறை மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்க பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8- 20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா மயிலாடுதுறை தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்

News September 22, 2025

உ.பி.,யில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை

image

அலகாபாத் HC-ன் உத்தரவை அடுத்து, FIR, அரஸ்ட் வாரண்ட் உள்பட போலீஸ் ஆவணங்களில் சாதிப் பெயரை பயன்படுத்த கூடாது என்று உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ் பலகை, வாகனங்களிலும் சாதிய அடையாளங்களுடன் கூடிய வாசகங்களை உடனடியாக அழிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சாதி பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

News September 22, 2025

அண்ணாமலை – டிடிவி சந்திப்பு: மீண்டும் கூட்டணியா?

image

NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி-ஐ அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து டிடிவி விலகிய நிலையில், தமிழக நலனுக்காக அவரை சந்திப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் சந்தித்து 1:30 மணி நேரம் ஆலோசித்ததாகவும், அப்போது டிடிவி-ஐ மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!