News June 26, 2024

அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு

image

பாஜகவுக்கு எதிரான INDIA கூட்டணியின் போராட்டம் காரணமாக, அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் புக் கம்பெனி (EBC) வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 மாதத்தில் மட்டும் 5000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகக் கூறியுள்ளது. முன்னதாக, அரசியல் சாசனம் தொடர்பான பாக்கெட் புத்தகத்துடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 25, 2026

தக்காளி விலை மளமளவென குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மளமளவென குறைந்து வருகிறது. குறிப்பாக, 1 கிலோ தக்காளி ₹6 – ₹8-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், சில்லறை கடைகளில் கிலோ ₹10 – ₹12-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் 1 கிலோ தக்காளி ₹4-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விரக்தியில் விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டுகினனர்.

News March 25, 2026

நாய்கள் இரவில் ஊளையிட இதுதான் காரணமா?

image

பொதுவாக நாய்கள் இரவில் ஊளையிட்டால், ’அது பேயை பார்த்து குரைக்கிறது’என்று சொல்வார்கள். இது நிஜமென்று பலர் நம்பினாலும், உண்மையில் இது மூடநம்பிக்கைதான். அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, பேய் இருப்பதும் உறுதியாகவில்லை; அது நாய்களின் கண்களுக்கு தெரிவதும் உறுதியாகவில்லை. துணை இல்லாமல் தனிமையில் தவிக்கும் நாய்களின் உளவியல் வெளிப்பாடே இத்தகைய ஊளையிடுதலுக்கு காரணம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.

News March 25, 2026

BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார். கீழ்வேளூர் – வடிவேல் ராவணன், அம்பத்தூர் – KN சேகர், செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வேட்பாளர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!