News June 27, 2024
வீரர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகையை இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் வென்றால் ₹1 கோடி, வெள்ளிக்கு ₹75 லட்சம், வெண்கல பதக்கத்திற்கு ₹50 லட்சம் வழங்கப்பட உள்ளது. ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றால் ₹2 கோடியும், வெள்ளி பதக்கத்திற்கு ₹1 கோடியும், வெண்கலத்திற்கு ₹75 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
Similar News
News November 7, 2025
உங்கள் குழந்தை கெட்ட வார்த்தை பேசாம இருக்கணுமா?

➤குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே பெற்றோர் அதை கண்டித்து, திருத்த வேண்டும் ➤அந்த வார்த்தைகளை பேசுவது அவர்களுடைய மதிப்பை குறைக்கும் என எடுத்துரையுங்கள் ➤அவர்கள் முன் நீங்கள் கெட்ட வார்த்தையை பேசாதீங்க ➤தவறுதலாக கெட்ட வார்த்தை பேசினால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அவர்களை கண்டிக்கும்போது கோபப்பட வேண்டாம். SHARE.
News November 7, 2025
வைகோவின் மனதை புண்படுத்த விரும்பவில்லை: OPS

2011-ல் அதிமுக கூட்டணிக்கு மதிமுக வராது என ஜெயலலிதாவிடம் OPS பொய் சொன்னதாக <<18224098>>வைகோ குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாக OPS விளக்கம் அளித்துள்ளார். மேலும், வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அது பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் 9-வது சீசனில் இதுவரை டபுள் எவிக்சன் நடக்கவில்லை. இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்த வாக்குகளை பெற்ற ரம்யாவும் துஷாரும் எவிக்சன் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே பிக்பாஸ் வீட்டில் பெரியளவில் ஆக்டிவாக இல்லை. அதனால், இவர்களை வெளியேற்றியது சுவாரஸ்யத்தை குறைக்காது என பிக்பாஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


