News June 17, 2024
வணிக தளங்களில் பணமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. ஆன்லைன் வணிக தளங்களில் பணமில்லா பரிவர்த்தனை 2018ஆம் ஆண்டு 20.4%ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 58.1%ஆக உயர்ந்துள்ளதாக ‘குளோபல் டேட்டா’ என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Similar News
News March 22, 2026
வாழை விலை தலைகீழாக சரிவு.. விவசாயிகள் கவலை!

TN-ல் வாழைப்பழம் விலை கடும் சரிவைக் கண்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிலோ ₹55 ஆக இருந்த ஏலக்கி ₹30, பூவன் ₹25லிருந்து ₹11 என சரிந்துள்ளது. அதேபோல், 1 கிலோ கற்பூரவாழை ₹13, செவ்வாழை ₹30, நேந்திரன் ₹12-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரிப்பு, ஏற்றுமதி சரிவே இதற்கு காரணம் எனக் கூறும் வியாபாரிகள் நாளொன்றுக்கு சுமார் ₹12 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் வடிக்கின்றனர்.
News March 22, 2026
1 லட்சம் டன் கச்சா எண்ணெய்.. சென்னை வந்த ரஷ்ய கப்பல்

ரஷ்யாவில் இருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் எற்றி வந்த கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. மற்றொரு கப்பல் வரும் 24-ம் தேதி வரும் என்றும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 கப்பல்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழி நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நாட்டின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.
News March 22, 2026
10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


