News April 5, 2024
44 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்.19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு வந்த புகாரின் அடிப்படையில், சென்னை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட 44 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விவரங்கள் தெரியவரும்.
Similar News
News November 4, 2025
தமிழகத்தில் SIR பணிகள் இன்று தொடக்கம்

TN-ல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற உள்ளது. SIR கணக்கீட்டுப் படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுடன் இணைந்து அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ல் வெளியாகும்.
News November 4, 2025
அடுத்த தலைவர் கலகத்தை தொடங்கினார்.. பரபரப்பு!

தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அடுத்த கலகத்தை தொடங்கியுள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தேசிய தலைமையை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளார். நடிகை குஷ்பு, விஜயதரணி ஆகியோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகியது கவனிக்கத்தக்கது.
News November 4, 2025
டாப் 7 பணக்கார இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையான ₹39.78 கோடியுடன் பிசிசிஐ அறிவித்துள்ள சிறப்பு தொகையான ₹51 கோடியும் சேர்த்து மொத்தம் ₹90 கோடி கிடைக்கப்போகிறது. இந்நிலையில், டாப்-7 பணக்கார இந்திய வீராங்கனைகளின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


