News April 27, 2025
வருமான உச்ச வரம்பு உயர்வு: TN அரசு அறிவிப்பு

கடந்த ஏப்.17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வருமான உச்ச வரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
Similar News
News April 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 28, 2025
மே.வங்க அரசியலில் பேசுபொருளாகும் மதம்

மம்தா பானர்ஜி ஒரு இந்து விரோதி என பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, மம்தா தனது இந்து அடையாளத்தை சமீபகாலமாக வெளிப்படுத்திவருகிறார்.தான் ஒரு பெருமைமிகு இந்து என்று சட்டசபையிலே அறிவித்தார். தன்னுடைய பிராமண அடையாளத்தையும் பறைசாற்றிக்கொண்டார். இதனால், சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மேற்கு வங்க அரசியல் களத்தில் மதம் பேசுபொருளாகி உள்ளது.
News April 28, 2025
IPL BREAKING: RCB அபார வெற்றி

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB அணி மகத்தான வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த DC அணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த RCB அணியின் கோலி (51), க்ருனால் (73) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் 18.3 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.