News August 13, 2024
பாரிஸில் சம்பவம் உறுதி: PCI தலைவர்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸில் 84 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக இந்திய பாரா ஒலிம்பிக் குழு தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்துள்ளார். 12 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளதாகவும், 25 பதக்கங்களுடன் நமது வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரிஸில் ஆக.28 முதல் செப்.8ஆம் தேதி வரை பாரா ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ளது.
Similar News
News April 7, 2026
நெல்லை: மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க <
News April 7, 2026
மம்தா பாடம் எடுக்கவேண்டாம்: மாணிக்கம் தாகூர்

பாஜக உடன் திமுகவும், காங்கிரசும் ரகசிய கூட்டணி என்ற மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மம்தா சமநிலையை இழந்து பேசுவதாக கூறிய அவர், பாஜகவிற்கு எதிராக ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு வைப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என காங்கிரஸுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
News April 7, 2026
டேவிட் வார்னர் கைது

Ex ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை சிட்னி போலீஸ் கைது செய்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகம் குடித்திருந்ததால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆஸி., சட்ட விதிகளின்படி வார்னருக்கு குறிப்பிட்ட காலம் சிறை தண்டனையுடன், $2,200 அபராதமும் விதிக்கப்படலாம். மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றே ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு குடிமகனும் நடத்தப்படுகின்றனர்.


