News August 16, 2024
116 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு: WHO

கடந்த 2 ஆண்டுகளில் 2ஆவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து இந்த அறிவிப்பை WHO வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 524 பேர் பலியாகியுள்ளனர். 96% பாதிப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
தவாகவில் இருந்து பாமகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகி!

தவாக மாநில இளைஞர் சங்க செயலாளர் ஆறுமுகம், அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்தார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தவாகவை வளர்க்க வேல்முருகனுடன் தீவிரமாக களப்பணியாற்றி வந்த நிலையில், திடீர் டிவிஸ்டாக பாமகவுக்கு தாவியுள்ளார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் பாமகவில் இணைந்துள்ளனர். பாமகவில் தந்தை – மகன் மோதலுக்கு நடுவே கட்சியை வலுப்படுத்த அன்புமணி தீவிரம் காட்டி வருகிறார்.
News November 23, 2025
தலை சுற்ற வைக்கும் அம்பானி பள்ளியின் கட்டணம்!

மும்பையில் இயங்கி வரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. *Kindergarten to 7th: ₹1.70 லட்சம். * 8 -10th (ICSE): ₹1.85 லட்சம். *8- 10th (IGCSE): ₹5.9 லட்சம். * 11 – 12th (IBDP): ₹9.65 லட்சம். ஷாருக்கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.
News November 23, 2025
கூட்டணி: குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., அறிக்கை

காங்., சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்ததால், TVK உடன் கூட்டணி இல்லை என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், காங்., வெளியிட்ட அறிக்கையில் திமுக என்றோ, இண்டியா கூட்டணி என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மொட்டையாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதனால், விஜய் உடன் கூட்டணி பேச்சு தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.


