News May 16, 2024
இடைவிடாமல் பெய்து வரும் கனமழை

கோவை, நீலகிரி, குமரி, திண்டுக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருவதால் கோடைகாலம், குளிர்காலமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்வதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
தங்கம், வெள்ளி புதிய உச்சம்.. விலை ₹8,000 மாறியது

<<18894822>>தங்கம் <<>>போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ₹8,000 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹8 உயர்ந்து ₹318-க்கும், மொத்த விற்பனையில் 1 கிலோ ₹8,000 அதிகரித்து ₹3,18,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும்போதிலும் பலரும் வாங்கி குவிப்பதால், சென்னையின் பல்வேறு கடைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.
News January 19, 2026
முன்பு அம்மா, இப்போ இருப்பது சும்மா(EPS): கருணாஸ்

அதிமுக எனும் ஒரு பெரும் கட்சி அதன் இயல்பை முற்றிலுமாக இழந்து விட்டது என கருணாஸ் தெரிவித்துள்ளார். அம்மா காலத்தில் மோடியே போயஸ் கார்டனுக்கு வந்து, சந்தித்து செல்வார் என்ற அவர், ஆனால் இப்போது இருப்பவர் அமித்ஷா ஆபிஸின் உதவியாளர் அழைத்தால்கூட அலறியடித்துக் கொண்டு டெல்லிக்கு ஓடுகிறார் என விமர்சித்துள்ளார். முன்பு அதிமுகவில் அம்மா இருந்தார், இப்போது சும்மா ஒருவர் இருக்கிறார் எனவும் கிண்டலடித்துள்ளார்.
News January 19, 2026
விரைவில் தவெக தேர்தல் அறிக்கை

அதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குழு TN முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதை முன்னிட்டு நாளை பனையூரில் தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இலவசங்கள் இல்லாத மக்கள் குறைகளை தீர்க்கும் வழிகள், வளர்ச்சி திட்டங்கள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


