News March 29, 2024
மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை!

சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும், பைக், கார்களில் வருவோருக்கு பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன.
Similar News
News December 31, 2025
திருத்தணி கொடூரத்தை கண்டு நெஞ்சம் பதறுகிறது: பா.ரஞ்சித்

திருத்தணியில் நடந்த கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் எனவும், வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
ராசி பலன்கள் (31.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
புடின் வீடு மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: PM

<<18708032>>புடினின்<<>> இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து பதிவிட்டுள்ள PM மோடி, அதிபரின் இல்லமே குறிவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளே மிகச்சிறந்த வழி என தெரிவித்த அவர், அமைதி முயற்சிகளை சீர்குலைக்கும் எந்த செயலிலும் இருநாடுகளும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


