News May 14, 2024
சபரிமலையில் 14ஆம் தேதி நடைதிறப்பு

வைகாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் மே 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பின் மே 15 – 19 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மே 19ஆம் தேதி அரிவராசனம் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழக்கம் போல ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2026
சோனியா காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி கங்காராம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மருத்துவமனையில் உள்ளனர். அவரது உடல்நிலை குறித்த நிலவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்குமுன் ஜனவரி மாதம் மூச்சுத்திணறல் காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2026
ஈரான் – US பேச்சுவார்த்தையை நடத்த தயார்: பாகிஸ்தான்

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாகப் பாக் PM ஷெரீப் வெளியிட்ட ட்வீட்டை, US அதிபர் ட்ரம்ப் ரீட்வீட் செய்துள்ளார். இதன்மூலம், பாகிஸ்தானின் விருப்பத்தை அவர் மறைமுகமாக வரவேற்றார். இதற்கிடையே US துணை அதிபர் JD வான்ஸ் இஸ்லாமாபாத் செல்லவிருப்பதாக ‘Axios’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
News March 25, 2026
RCB அணியின் புதிய உரிமையாளர் யார் தெரியுமா?

நடப்பு சாம்பியன் RCB அணியை யார் வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவழியாக முடிவு கிடைத்துவிட்டது. அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு சுமார் ₹16,700 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமைப்பில் US நிறுவனங்களான டேவிட் பிளிட்சர், பிளாக்ஸ்டோன் & டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை கூட்டாளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


