News April 1, 2025
நண்பனின் தாயுடன் தகாத உறவு.. இளைஞர் கொலை!

நண்பரின் தாயுடன் தகாத உறவிலிருந்த இளைஞரை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரின் சிதாமார்கியை சேர்ந்த ராஜாகுமார்(22). இவர், டெல்லியில் ஹோட்டலில் வேலை செய்தபோது தனது நண்பருடன் அடிக்கடி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தாயுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் கணவர், உறவினர்கள் ராஜாகுமாரை கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார்.
Similar News
News December 6, 2025
10th போதும்.. ₹21,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: 21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <
News December 6, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

அமமுகவில் இருந்து அடுத்தடுத்து பல நிர்வாகிகள் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் R.சுரேஷ், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். முன்னதாக அமமுகவினர் அதிமுகவில் இணைந்து வருவது குறித்து பேசிய டிடிவி தினகரன், விசுவாசம் இல்லாதவர்கள் கட்சி மாறி வருவதாக சாடியிருந்தார்.
News December 6, 2025
இதுதான் அம்பேத்கரின் வெற்றி: CM ஸ்டாலின்

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.


