News May 7, 2025
தகாத உறவு.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை!

திருச்சியில் திருமணமான ஒரு பெண்ணுடன் நாசர் அலி (30) என்பவர் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் 5 வயது மகனை நாசர் அலியும், அவரது நண்பர் வேலுமணியும் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 20, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com என்ற e-mail முகவரிக்கு இன்றுக்குள் தெரிவிக்க வேண்டும். இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.
News November 20, 2025
பிரபல நடிகை பாஜகவில் இணைந்தார்

பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி, கேரள மாநில BJP துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தனது அரசியல் பயணத்தை பாஜகவில் இருந்து தொடங்குவதாகவும், சமூக, கலாசார துறையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தான் மோடியின் ஆதரவாளர் எனவும் கூறினார். ஊர்மிளா உன்னி, மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களிலும், தமிழில், ஏழாம் அறிவு, யான், ஒரு நடிகையின் வாக்குமூலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
News November 20, 2025
பள்ளி மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 11 – ஏப்.6 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நவ.27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், தாங்கள் கொடுத்த பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருப்பின், இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


