News December 4, 2024
நடுக்கடலில்…கீழே சுறாக்கள், மேலே ஹோட்டல்!

யோசிச்சி பாருங்க, ஒரு ஹோட்டல்ல சுவையான உணவு கிடைக்கிறது. ஆனா கீழே மிகவும் பயங்கரமான சுறாக்கள் இருந்தா என்ன பண்ணுவீங்க. இந்த உணர்வை தான் Frying Pan Hotel அளிக்கிறது. இந்த ஹோட்டல் வட கரோலினா கடற்கரையிலிருந்து 32 மைல் தொலைவில் கடலில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 135 அடி உயரத்தில் உள்ள இது முதலில் லைட்ஹவுஸாக இருந்துள்ளது. இங்கு செல்ல ஹெலிகாப்டர், படகு வசதிகள் உண்டு. நீங்க எப்போ போறீங்க?
Similar News
News December 9, 2025
காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
News December 9, 2025
செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


