News March 29, 2024
தமிழ்நாட்டில் வெயில் 40 டிகிரியை தொட்டது

ஈரோட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக பதிவாகி மக்களை தவிக்கவிட்டது. கரூர் பரமத்தியில் 39.2 டிகிரி, தர்மபுரியில் 39 டிகிரி, சேலத்தில் 38.8 டிகிரி, திருத்தணியில் 38.3, மதுரையில் 38.2 என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரியாக பதிவானது. மார்ச் மாதம் முடியும் முன்பே வெப்பநிலை 40 டிகிரியை தொட்டிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
Similar News
News January 19, 2026
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், திவ்யா கணேசன் டைட்டில் வின்னராக உருவெடுத்துள்ளார். 28-வது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த இவர், வீட்டில் நடந்த பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸில் மகுடம் சூடியுள்ளார். இவரது திறமைக்கு விரைவிலேயே கோலிவுட்டில் பல படங்களில் கமிட் ஆவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
News January 18, 2026
விஜய்க்கு அபரிமித செல்வாக்கு உள்ளது: கிருஷ்ணசாமி

விஜய் மற்ற கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பார் என்பதைவிட, அவரே ஒரு சக்தியாக மாறுவார் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். விஜய்யால் எவ்வளவு வாக்குகளை பெற முடியும் என்பதை கூற முடியவில்லை என்றாலும், அவர் அபரிமிதமான செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். அவர் மீது எவ்வளவு குற்றச்சாட்டுகளை தூக்கி வீசினாலும், அது அவருக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 18, 2026
அடுத்த ஆபரேஷனை துவங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கிஷ்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி இந்திய ராணுவம் ‘Operation Trashi-I’-ஐ தொடங்கியபோது, நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


