News June 19, 2024
இந்தியாவில் காற்று மாசால் தினமும் 464 சிறார் உயிரிழப்பு

State of Global Air 2024 என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த Health Effects நிறுவனம் காற்று மாசு பிரச்னைகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசால் இந்தியாவில் சராசரியாக தினமும் 5 வயதுக்குட்பட்ட 464 குழந்தைகள் உயிரிழப்பதாகத் கூறப்பட்டுள்ளது. 2021இல் உலகம் முழுவதும் 81 லட்சம் பேர் இறந்ததாகவும், இதில் இந்தியாவில் மட்டும் 21 லட்சம் பேர் பலியானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
ஹார்முஸ் நீரிணையில் வசூலை தொடங்கிய ஈரான்

ஹார்முஸ் நீரிணையை கடக்க கப்பல்களிடம் ஈரானின் IRGC கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது. ஒரு பேரல் எண்ணெய்க்கு ஒரு டாலர் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வழியாக கப்பல் இயக்குபவர்கள், IRGC-ஐ தொடர்பு கொண்டு செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். அக்கப்பலுக்கு US, இஸ்ரேலுடன் தொடர்பில்லை என உறுதிப்படுத்திய பிறகு ஹார்முஸ் நீரிணையை கடக்க Permit Code அளிக்கப்படுகிறது.
News April 2, 2026
ஏப்ரல் 2: வரலாற்றில் இன்று

*உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் *1881 – இந்திய விடுதலைப் போராட்டக்காரர் வ.வே.சு.ஐயர் பிறந்தநாள் *1884 – தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பிறந்தநாள் *1924 – நாதஸ்வர கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பிறந்தநாள் *1984 – விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் சர்மா பெற்றார் *2011- 28 ஆண்டுகளுக்கு பிறகு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றது
News April 2, 2026
ஆண்களை திருமண வலையில் வீழ்த்திய பலே கில்லாடி

ராஜஸ்தானில் திருமண ஆசை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய ரேகா கவுர் என்பவரை போலீஸ் தேடி வருகிறது. திருமணம் முடிந்தவுடன் மணமகனின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பிப்பதே அவரது வாடிக்கையாகும். இந்நிலையில் விக்ரம்ஜீத்தை மணந்த ரேகா கவுர், அவருடைய வீட்டில் இருந்து தப்பிக்க மாமியாருக்கு விஷம் வைத்துள்ளார். முதலில் ரேகா கவுர் காணாமல் போனதாக எண்ணிய விக்ரம்ஜீத், பின்னர் உண்மையை அறிந்து மனமுடைந்தார்.


