News March 29, 2024
2026இல் பாமக என்ற கட்சி இல்லாத நிலை உருவாகும்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 110 தொகுதிகளில் பாமக என்ற கட்சியே கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விமர்சித்துள்ளார். மேட்டூரில் பேசிய அவர், “மேட்டூர், பென்னாகரம், தருமபுரி தொகுதியில் பாமக வென்றதற்கு அதிமுக தான் காரணம். தற்போது, அவர்கள் நம்மிடம் இருந்து ஓடி விட்டார்கள். அதுவும் நல்லது தான். 2026இல் பாமக என்ற கட்சி இல்லாத நிலை உருவாகும். அக்கட்சி காணாமல் போகும்” என்றார்.
Similar News
News December 3, 2025
ரெட் அலர்ட்.. நாளை பள்ளிகள் விடுமுறையா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், வட சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கையால் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை நீடிப்பதால் நாளை விடுமுறை விட வாய்ப்புள்ளது.
News December 3, 2025
டி20 அணியில் இணைந்த சுப்மன் கில்

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான அணியில் கில், அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்சர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, வருண், அர்ஷ்தீப், குல்தீப், ராணா, சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்..
News December 3, 2025
நடிகை சமந்தாவின் கல்யாண வைபோக கிளிக்ஸ்

ராஜ் நிடிமொரு – சமந்தா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை ஸ்டைலிஸ்ட் பல்லவி சிங், ‘தெய்வீகப் பெண்மை முழுமையாக மலர்ந்தது’ என்ற கேப்ஷனுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படங்களில் மணக்கோலத்தில் முழு நிலவாய் சமந்தா ஜொலிக்கிறார். கணவர் ராஜ் நிடிமொருவை போதுமான அளவு தவிர்த்துவிட்டு மணப்பெண்ணின் வெட்கத்தை போட்டோகிராஃபர் பதிவு செய்துள்ளார்.


