News April 14, 2024
2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்

2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில் தமிழகம் 13 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கவலை தெரிவித்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் தான் கூட்டணி என அன்புமணி கூறியுள்ளார்.
Similar News
News November 7, 2025
மழைக்காலத்தில் வரும் பெரும் பிரச்னை; சரி செய்ய டிப்ஸ்

மழைக்காலத்தில் ஈரத்தில் நடப்பதால் கால் விரல்களின் இடுக்குகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இது வந்தால், அரிப்பு, வலி என ஆளையே ஒருவழி செய்துவிடும். கவலையவிடுங்க. சேற்றுப்புண்ணை சீக்கிரமே சரிசெய்யலாம். இதற்கு, வேப்பிலையை அரைத்தோ (அ) வேப்ப எண்ணெயை காய்ச்சியோ புண்ணில் வைக்கலாம். இதனை தொடர்ந்து செய்துவர புண் சரியாகும், வலி நீங்கும். வலியில் இருந்து விடுதலை தரும் இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 7, 2025
தளபதி கச்சேரிக்கு நேரம் குறிச்சாச்சு!

விஜய்யின் கடைசி படம் என்பதால் ஜனநாயகனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நீண்ட நாள்களாக படம் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், நாளை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு நேற்று தெரிவித்திருந்தது. இதனிடையே சரியாக நாளை மாலை 6.03-க்கு பாடல் வெளியாகும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சரவெடி கொண்டாட்டத்துக்கு தளபதி பேன்ஸ் ரெடியா?
News November 7, 2025
நகை கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000-க்கு பதிலாக ₹7,000 வரை கடன் வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இதனை வங்கிகள் இன்னும் செயல்படுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலையொட்டி தள்ளுபடி கிடைக்கும் என பலரும் நகை கடன் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், முறையான விதிமுறைகளை வகுக்காமல் ₹7,000 வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர்.


