News October 1, 2025
இன்னும் 19 நாள்களில்..

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மாதம் தொடங்கிவிட்டது. இன்னும் 19 நாள்களில் ரோஹித்- கோலி இருவரும் ப்ளூ ஜெர்சியில் களத்தில் நிற்பார்கள். T20, டெஸ்ட் பார்மெட்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டவர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ODI தொடரில் விளையாடவுள்ளனர். கடைசியாக Ro- Ko காம்போ மார்ச் 9-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 24, 2026
வெயில்ல போகலனாலும் முகம் கருக்குதா? இதுதான் காரணம்

➤PCOS, தைராய்டால் ஹார்மோன் மாற்றம் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் B12, C, E குறைபாடு ➤நீரிழிவு நோய் ➤போனில் இருந்து வெளியாகும் Blue light ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பு பெற வெறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்தாமல், டாக்டரிடம் சென்று மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE.
News March 24, 2026
வீட்டு சிலிண்டர் குறைப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் எடையை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், LPG கேஸ் இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு நிலவினாலும் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சமடையச் செய்ய வேண்டாமென்றும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
News March 24, 2026
மோசமான சாதனை.. RCB தான் டாப்

2024-ல் RCB-க்கு எதிராக SRH 287 ரன்கள் குவித்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 2017-ல் KKR-க்கு எதிராக RCB 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே குறைந்தபட்ச ஸ்கோராகும். குறைந்த ஸ்கோருக்கு அவுட்டான அணிகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் RR, டெல்லி உள்ளன. RCB-க்கு எதிராக 58, 59 ரன்களுக்கு RR ஆல் அவுட்டாகி இருக்கிறது. 2017-ல் டெல்லி டேர்டெவில்ஸை 66 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் சுருட்டியுள்ளது.


