News April 1, 2024

இம்ரான் கான் தண்டனை நிறுத்தி வைப்பு

image

பரிசுப்பொருட்கள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2018 – 2022ஆம் ஆண்டில் பாக்., பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள் அளித்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷாகானாவில் ஒப்படைக்காமல் ஊழல் செய்த வழக்கில் நீதிமன்றம், இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

Similar News

News January 13, 2026

ரேஷனில் முக்கிய மாற்றம்.. ரத்தாகும் ALERT!

image

TN அரசு அறிக்கையின் படி, 2025-ல் சுமார் 4 கோடி போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அரசு பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 1. அனைத்து அட்டைதாரர்களுக்கும் e-KYC கட்டாயம். 2. ஆதார் இணைப்பு அவசியம்; இணைக்கப்படாத அட்டைகள் 2026 மார்ச் 31-க்குள் செயலிழக்கும். எனவே, உங்கள் ரேஷன் அட்டை ரத்தாகாமல் இருக்க மேற்படி சொன்ன விஷயங்களை செய்து முடிங்க மக்களே. SHARE.

News January 13, 2026

பாஜகவின் இசைக்கு ஆடும் அதிமுக: மனோ தங்கராஜ்

image

பிரிந்து கிடக்கும் அதிமுக, உள்கட்சி பிரச்னைகளை சமாளிக்க பாஜகவின் இசைக்கு ஏற்ப ஆட்டம் போடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். குமரியில் பேசிய அவர், PM மோடி எத்தனை முறை TN வந்தாலும் அவர்களுக்கு(பாஜகவுக்கு) ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றார். மேலும், அண்ணாவின் உரிமை பிரச்னைக்கே(பராசக்தி பட வசனம் நீக்கம்) அதிமுக குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

ஒரே கதை.. ஒரே ஹீரோயின்.. 3 படங்கள்!

image

தெலுங்கில் ‘துளசி’(2007) படம் பெரிய ஹிட்டடித்தது. அதை ‘விஸ்வாசம்’(2019) என மாற்றி எடுக்க, மெகா ஹிட். இதை இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் தெலுங்கில் ‘மன சங்கர வரபிரசாத் காரு’(2026) என ரிலீஸ் செய்ய, மீண்டும் ஹிட். இதில் முக்கிய பாய்ண்ட், 3 படத்திலும் நயன்தாராதான் ஹீரோயின். அதைவிட பெரிய டிவிஸ்ட், ‘துளசி’ ஹீரோ வெங்கடேஷ், ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

error: Content is protected !!