News July 3, 2024
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு சிறை

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ரிஷி ஷா, ஷ்ரதா அகர்வால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயின் மதிப்பில் 8300 கோடி) மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ரிஷி ஷாவுக்கு 7.5 ஆண்டுகளும், ஷ்ரதாவுக்கு 3 ஆண்டுகளும், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Similar News
News September 21, 2025
55,000 பேருக்கு வேலைவாய்ப்பு: ஸ்டாலின்

தூத்துக்குடியில் ₹30 ஆயிரம் கோடி முதலீட்டில், 55,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 2 கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதன் மூலம் சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாறு தற்போது தூத்துக்குடியில் அமையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 21, 2025
நவராத்திரியும் 9 தேவிகளும்

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 21, 2025
BREAKING: அக்.20-ல் அனைத்து பள்ளிகளுக்கும்.. உத்தரவு

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.