News August 16, 2024
தங்கத்தின் இறக்குமதி 4.23% சரிவு

தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழலில், அதன் இறக்குமதி ஏப்ரல் – ஜூலை காலக்கட்டத்தில் 4.23% சரிந்து, ₹1.05 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.10 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.65% குறைவாகும். எனினும், பண்டிகை காலம் தொடங்குவதாலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதாலும், செப்டம்பரில் நகை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 18, 2025
நான் குடிப்பேன்.. ஒப்புக் கொண்ட தனுஷ் பட ஹீரோயின்

தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.
News August 18, 2025
பெண்களுக்கு ₹25 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெண்கள் ₹25 லட்சம் வரை தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, BC, MBC, சீர் மரபினர்(DNC) உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. ₹1.25 லட்சம் வரை வட்டி விகிதம் 7%, ₹1.25 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வட்டி விகிதம் 8% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். SHARE IT.
News August 18, 2025
டெல்லியில் PM மோடி – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

NDA-வில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள PM மோடி, நீண்ட ஆண்டுகால பொது சேவை மற்றும் அனுபவங்களை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.