News May 16, 2024
செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய உத்தரவு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமின் கேட்கிறார். இதற்கு, அவர் இன்னும் எம்எல்ஏவாக தொடர்வதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக ED கூறுகிறது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News November 16, 2025
11-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதிகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10-ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, , டிச.10: தமிழ், டிச.12: ஆங்கிலம், டிச:15: இயற்பியல், பொருளாதாரம். டிச.17: கணிதம், விலங்கியல், வர்த்தகம். டிச.19: வேதியியல், கணக்கு பதிவியல். டிச.22: கணினி அறிவியல். டிச.23: உயிரியல், வரலாறு, தாவரவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருப்பதால் சீக்கிரம் தயாராகுங்கள் மாணவர்களே!
News November 16, 2025
6-9 வகுப்புகள்.. அரையாண்டு தேர்வு அட்டவணை

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. *டிச.15- தமிழ், டிச.16-ஆங்கிலம், டிச.17-விருப்ப மொழி, டிச.18-கணிதம், டிச.19-உடற்கல்வி, டிச.22-அறிவியல், டிச.23-சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 4-ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறையாகும்.
News November 16, 2025
பாலையாவை 3D-ல் பார்க்க ரெடியா?

இயக்குநர் போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2’ திரைப்படம் டிச.5-ல் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 22 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழுவின் இந்த அறிவிப்பால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், பனிமலையில் பாலையா சிவ தாண்டவம் ஆடும் காட்சிகளை 3D-ல் பார்க்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.


