News September 25, 2025
கவின் வழக்கில் சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல்

கவின் கொலை விவகாரத்தில் முக்கியமான தகவலை கோர்ட்டில் CBCID தெரிவித்துள்ளது. கவினின் கொலை வழக்கில் கைதான ஜெயபால் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, நெல்லை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் கொலை நடப்பதற்கு முன்னரே, ஒருமுறை கவினை அழைத்து சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மிரட்டியதாக CBCID தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி ஜெயபால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Similar News
News September 25, 2025
உசைன் போல்ட்டின் பொன்மொழிகள்

⁎பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். ⁎மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது கருத்தே இறுதியானது. ⁎நான் என்ன செய்தாலும் அதில் மட்டுமே என் முழு கவனமும் இருக்கும். ⁎உங்களுக்கு என்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டும். ⁎உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
News September 25, 2025
லோகோவை மாற்றிய சுசுகி

22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி தனது பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. 1958 முதல் பயன்பாட்டில் உள்ள S-வடிவ லோகோ முதன்முதலில் 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது புதிதாக ஷார்ப்பான வடிவத்தில் இருந்து பிளாட்டாக ‘S’ லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஸ்லோகனும் ‘உங்களின் பக்கம்’ என மாற்றப்பட்டுள்ளது.
News September 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 469
▶குறள்: நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
▶பொருள்: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.