News October 26, 2025

IMPORTANT: இதெல்லாம் தயாராக வச்சுக்கோங்க

image

இன்று <<18106409>>கனமழை <<>>பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயங்களை கவனியுங்க ✦வாட்டர் டேங்க் நிரப்புங்க ✦Mobile, emergency lamp, laptop சார்ஜ் போடுங்க ✦Torch, matchbox, candle, கொசுவர்த்தி, குடை, ரெயின்கோட் தயாராக இருக்கட்டும் ✦காய்கறிகள், பிரெட், பழங்கள், பால், பிஸ்கட் & குடிநீர் ✦அவசரத் தேவைக்கான மருந்துகள், செலவுக்கு கொஞ்சம் ரொக்கப் பணம் ✦இன்வர்ட்டர், கேஸ் சிலிண்டர் செக் பண்ணுங்க.

Similar News

News January 28, 2026

அந்தியூர் அருகே சோகம்: ஏழு மாடுகள் பலி!

image

அந்தியூர் அருகே காந்திநகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமிக்குச் சொந்தமான ஏழு மாடுகள், செடிகளுக்குப் பாய்ச்ச வைத்திருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்ததால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.

News January 28, 2026

விமானம் 100% பாதுகாப்பானது.. நிறுவனம் விளக்கம்

image

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவார்<<>> பயணித்த விமானம் 100% பாதுகாப்பானது என அவ்விமான நிறுவனமான VSR ventures விளக்கமளித்துள்ளது. விமான குழுவினரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களே என குறிப்பிட்டு, இந்த விபத்து மோசமான வானிலை மூலம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அஜித் பவாருடன் இந்த விபத்தில் விமான பைலட்கள் சுமித் கபூர் & ஷாம்பவி பதக் ஆகியோர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 28, 2026

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

image

தொகுதி பங்கீடு குறித்து ஒரு ரஃப் லிஸ்ட்டை திமுக போட்டுவைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் திமுகவுக்கு 164, காங்., 25, விசிக, மதிமுக, CPM, CPI, தேமுதிகவுக்கு தலா 6, ராமதாஸுக்கு 4, கொமதேக, மநீம, IUML-க்கு தலா 3, மமகவுக்கு 2 என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இம்முறையும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளே ஒதுக்கும் எண்ணத்தில் திமுக இருப்பதால் கூட்டணியில் மேலும் பிரச்னை வெடிக்கலாம் என பேசப்படுகிறது.

error: Content is protected !!