News April 20, 2025
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
Similar News
News November 25, 2025
திருப்பூர்: ஐடிஐ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலைகள்!

1) பரோடா வங்கியில் வேலை -(https://bankofbaroda.bank.in/)
2) தமிழக சுகாதாரத்துறையில் வேலை-(mrb.tn.gov.in)
3) மத்திய உளவுத்துறையில் வேலை- (mha.gov.in)
4) ரயில்வேயில் 1,785 பேருக்கு வேலை -( rrcser.co.in)
5) சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -(clri.org)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 25, 2025
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 25, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


