News August 12, 2024
விஜய்க்கு கனிமொழி கூறிய முக்கிய அட்வைஸ்

சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழியிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் குடும்பத்தோடு சிறு வயதில் இருந்தே பழகியுள்ளேன். சிறந்த தெளிவும், கடின உழைப்பும் தான் சினிமாவில் அவர் வெற்றி பெற காரணமாக உள்ளது. அதே தெளிவு, உழைப்புடன் அரசியல் களத்திலும் விஜய் பயணிக்க வேண்டும்” எனக் கூறினார்.
Similar News
News March 4, 2026
தேமுதிக, நாதகவுக்கு சின்னம் ஒதுக்கியது ECI

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து ECI அறிவித்துள்ளது. தேமுதிகவின் கோரிக்கையை ஏற்றே இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. இத்தேர்தலில் தேமுதிக குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேபோல், நாதகவுக்கு இரு மாநிலங்களிலும் விவசாயி சின்னம் ஒதுக்கி ECI உத்தரவிட்டுள்ளது.
News March 4, 2026
பைல்ஸ் என காட்டியும் விடுப்பு கிடைக்கவில்லை

லக்னோ ரயில்வே பிரிவு லோகோ பைலட் ஒருவர் பைல்ஸ் சிகிச்சைக்கு பின் ஓய்வுக்காக விடுப்பு கேட்டுள்ளார். மருத்துவ அறிக்கைகளை காட்டியும் உயர் அதிகாரி விடுப்பு தர மறுத்ததால், அவர் கோபத்தில் பேண்ட்டை கழற்றி காட்டியுள்ளார். இறுதியில் தொழிற்சங்க தலைவர்கள் தலையீட்டால் விடுப்பு கிடைத்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 4, 2026
பயங்கரமான ஸ்கெட்ச்: USA-விற்கு ஷாக் கொடுத்த ஈரான்!

கத்தார் உள்ளிட்ட நாடுகளின் ஏவுகணை தளங்களை பயன்படுத்தி US தாக்கி வருகிறது. குறைந்த கையிருப்பிலான ஏவுகணைகளே US அங்கு இருப்பதால், அதை முதலில் அழிக்க ஈரான் முடிவெடுள்ளதாம். அதனால்தான், Patriot ஏவுகணையை(₹33 கோடி) வீணடிக்க Shahed ட்ரோன்களை(₹17 லட்சம்) ஈரான் பயன்படுத்தியது. ஏவுகணைகள் காலியானால், பாதுகாப்பு தளங்களை தாக்கி, போரை நிறுத்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாம்.


