News March 16, 2024
ஓபிஎஸ் அணியினர் முக்கிய ஆலோசனை!

மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
Similar News
News October 16, 2025
மதுரை: பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

சம்மட்டிபுரம் திமுக செயலாளரும் 70 வது வார்டு கவுன்சிலரின் கணவருமான தவமணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பழனிகுமாருக்கும் பொதுப்பாதை தொடர்பாக இருந்த முன் பகையால் பழனிக்குமாரையும் அவரின் மனைவியையும், தவமணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேதுராணி என சிலர் தாக்கினர். இதனால் பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் 5 பிரிவின் கீழ் மதுரை எஸ்எஸ் காலனி போலீசார் விசாரிப்பதால், தவமணி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
News October 15, 2025
மதுரை: தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

மதுரை வேல்முருகன் நகரில் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கும் விவகாரத்தில் தி.மு.க மாநகராட்சி கவுன்சிலர் அமுதாவின் கணவரும், பகுதி செயலாளருமான தவமணி மீது, குடியிருப்பு சங்க நிர்வாகிகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்வன்முறை தடுப்புச்சட்டம் உட்பட 5பிரிவுகளின்கீழ் SSகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மே லும் சம்மட்டிபுரம் பகுதி கழக செயலாளர் பதவியில் இருந்தும் தவமணி நீக்கப்பட்டுள்ளார்.
News October 15, 2025
மதுரை: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <