News September 7, 2025
USA உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு, USA 50% வரி விதித்ததில் இருந்தே இரு நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான கருத்துகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், USA உடனான நல்லுறவுக்கு PM மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக EAM ஜெய்சங்கர் கூறியுள்ளார். ட்ரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்று டிரம்ப் பேசியிருந்தார்.
Similar News
News September 7, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே கேம் சேஞ்சர் இவர்தான்

இந்திய அணியில் விராட், ரோஹித் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று இங்கி., முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் இல்லாதபோது, கில் தலைமையிலான இளம்படை இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததையும் அவர் பாராட்டினார். அதேநேரம், தற்போதைய இந்திய அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றும் அவர் புகழாராம் சூட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 7, 2025
எனக்கு என்னமோ திருப்திப்படல: அண்ணாமலை

கடந்த சில நாள்களாக கூட்டணியில் (NDA) நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். TTV தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை NDA கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருப்பதை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதையே பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
News September 7, 2025
BCCI பேங்க் பேலன்ஸ் இவ்வளவா?

BCCI வங்கிக் கணக்கில் ₹20,686 கோடி உள்ளதாக தகவல் வெளியாகி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019-ல் ₹6,059 கோடியாக இருந்த பேங்க் பேலன்ஸ், கிட்டத்தட்ட ₹14,000 கோடி உயர்ந்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியினரின் பங்கு அளப்பரியது என்று கூறப்படுகிறது. சர்வதேச தொடர்களை விட IPL சீசன்களில் BCCI அதிக கல்லா கட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்கார கிரிக்கெட் வாரியமாகவும் BCCI உள்ளது.