News May 10, 2024

இம்பேக்ட் பிளேயர் விதி நிரந்தரம் அல்ல

image

இம்பேக்ட் பிளேயர் விதி, சோதித்துப் பார்க்கப்பட்டதே தவிர நிரந்தரம் அல்ல என BCCI செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்த விதியால் 2 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய கேப்டன், வீரர்கள், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி விதியை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்” எனக் கூறினார்.

Similar News

News September 23, 2025

இந்தியாவில் பரவும் வைரஸ் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன?

image

இந்தியாவில் H3N2 வைரஸ் பரவலால் பலரும் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உடல் வலி, சோர்வு, வறண்ட தொண்டை, தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல் இதன் அறிகுறிகளாகும். H3N2 வைரஸால் நீங்கள் பாதிக்கப்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்கவும், போதுமான நேரம் தூங்குங்கள், வெளியே செல்லாதீர்கள். மேற்கண்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகள், முதியவர்கள் டாக்டரை உடனடியாக அணுகி ஆலோசனை பெற்று மருந்து மாத்திரை சாப்பிடவும்.

News September 23, 2025

விஜய்யை திமுக முடித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

image

தனித்து தேர்தலில் போட்டியிட்டால் திமுக விஜயை முடித்துவிடும் என ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். EPS துணையில்லாமல் தவெக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்தின் தொண்டர்கள் போல, விஜய்யின் தொண்டர்கள் பக்குவம் அடையவில்லை என தெரிவித்த அவர், அரசியல் களத்தில் தவெக பெரும் தடுமாற்றத்தை சந்திக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 23, 2025

வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள்?

image

’வீட்டுல சும்மாதான இருக்க, இத செஞ்சிடு’ – இல்லத்தரசிகளிடம் நாம் சர்வசாதாரணமாக சொல்லும் விஷயம் இது. நாம் சொல்வதை போல அவர்கள் ஒருநாள் சும்மா இருந்தா என்னாகும்? பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளை முக்கியமானதாகவே நாம் கருதுவதில்லை. வீட்டிலுள்ள பெண்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை மேலே உள்ள படம் உணர்த்துகிறது. பெண்களின் உழைப்பை பாராட்ட ஒரு லைக் போடலாமே. கருத்தையும் கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!