News November 27, 2024
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா இலை டீ

கொய்யா இலை டீ ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டிருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். செரிமான பிரச்னையைச் சரி செய்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர். ஒரு கப் நீரில் தேவையான அளவில் கொய்யா இலைகளைக் கொதிக்க விட வேண்டும். அதில் ஏலக்காய், வெல்லம் சேர்த்து வடிகட்டினால் கொய்யா இலை டீ ரெடி. ட்ரை செய்து பாருங்கள்.
Similar News
News August 22, 2025
Dream 11 கேமுக்கு தடை

ஆன்லைன் கேமிங் மசோதா-2025 நிறைவேறிய நிலையில், Dream 11 கேம் நிறுத்தப்படும் என டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பணம் வைத்து விளையாடும் அனைத்து வகை கேம்களையும் நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. FanCode, DreamSetGo, மற்றும் Dream Game Studios ஆகியவை மட்டும் செயல்படும். 2024-ல் டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஈட்டிய ₹9,600 கோடி வருமானத்தில் 90% Dream 11-ல் இருந்தே கிடைத்ததாம்.
News August 22, 2025
கைகளை வலுப்படுத்தும் ‘அதோ முக ஸ்வனாசனா’

✦இது கைகள், கால்கள், தோள்பட்டை & முதுகெலும்புக்கு வலுப்படுத்தும்.
➥கால்களை விரித்து வைத்து, முதுகு நேராக இருக்கும் படி நிற்கவும்.
➥பிறகு முட்டியை மடக்காமல், காலை நகர்த்தாமல், கைகளை படத்தில் போல நீட்டி, தரையிலும் ஊன்றவும்.
➥உடல் தலைகீழாக V வடிவில் இருக்கும். 15- 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 22, 2025
தவெக முதலில் காங்.,ஐ எதிர்க்க வேண்டும்: சீமான்

மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில் காங்கிரஸை எதிர்க்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். தவெக மாநாடு குறித்து பேசிய அவர், விஜய் நடத்திய 2-வது மாநில மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இருந்தன. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படங்கள் இடம்பெறுமா என கேட்டார். விஜய்யின் பின்னால் திரளுபவர்கள் நண்பா, நண்பிகளாக இருக்கலாம். ஆனால் தனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகளாக இருப்பதாக கூறினார்.