News June 15, 2024
உடனே உங்க ஃபோனை எடுத்து ஒரு மெசேஜை தட்டுங்க

எங்கேயாவது மின்திருட்டு நடப்பது தெரிந்தால், உடனே கைப்பேசியை எடுத்து, உங்கள் விவரங்களை தெரிவிக்கலாமலே, மின்திருட்டு இடம், புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என மின்வாரியம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மின் திருட்டை தவிர்ப்பதால், கூடுதல் மின் தேவை சுமை குறையும். தரமான மின்சாரம் வழங்க உதவும். பொருளாதாரம் மேம்படும். உயிர்களை காக்கும். சமூகம் மேம்படும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
கதறும் Employees.. எங்களுக்கும் ரெஸ்ட் வேணும்!

வேலை செய்யும் 88% இந்தியர்களுக்கு லீவு கிடைக்காமல், நேர வரைமுறையின்றி வேலை செய்வதாகவும், பொது விடுமுறையிலும் வேலை செய்ய நிறுவனங்கள் வலியுறுத்துவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. வேலை நேரத்தில் டீ பிரேக் கூட கிடைப்பதில்லையாம். வீட்டுக்கு சென்ற பிறகு போன் வந்து அதனை எடுக்காமல் விட்டால், Promotion கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் 79% பேர் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் ரெஸ்ட் வேண்டாமா..?
News September 12, 2025
கோவையில் நிலம் வாங்கியது உண்மை: அண்ணாமலை

கோவையில் விவசாய நிலம் வாங்கியது உண்மை தான் என அண்ணாமலை கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்ய தங்களது ‘We The Leaders’ அறக்கட்டளை மூலம் கடந்த ஜூலை 12-ம் தேதி நிலம் வாங்கப்பட்டதாகவும், பத்திரப்பதிவு கட்டணமாக ₹40,59,220 செலுத்தியுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ₹85 கோடி மதிப்பிலான நிலத்தை ₹4.5 கோடிக்கு சட்டவிரோதமாக அவர் வாங்கியுள்ளதாக சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சித்து வந்தது கவனிக்கத்தக்கது.
News September 12, 2025
அரசின் அடுத்த தீபாவளி பரிசு

EPFO 3.0 குறித்த கூட்டம், அக்டோபர் 2-வது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதில், PF Advance பெறுவது உள்பட முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம். குறிப்பாக, PF பணத்தை ATM-ல் எடுக்கும் நடைமுறை அமலாக்கப்படுவது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே PM மோடியின் தீபாவளி பரிசில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.