News March 17, 2024
தாமரையில் பிரதமர் மோடி உருவம்

கோவையில் நாளை (மார்ச்.18) பாஜக சார்பில் பிரதமரின் ரோட் ஷோ நடைபெற உள்ளது. ரோட் ஷோ நடைபெறும் வழி முழுவதும் பாஜகவினர் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் யுஎம்டி ராஜா, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பாஜகவின் சின்னமான தாமரையில் மோடியின் உருவத்தை வரைந்து வெல்கம் மோடி ஜி எனவும், மலர்ந்த முகமே வருக எனவும் வரைந்து அசத்தியுள்ளார்.
Similar News
News January 21, 2026
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை,
வடவள்ளி, வீரகேரளம், தெலுங்குபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பறவல்லி, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கா.மண்டபத்தின் ஒரு பகுதி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 21, 2026
கடும் நடவடிக்கை: கோவை எஸ்பி எச்சரிக்கை!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, வாட்ஸ் அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியங்கள் காக்கப்படும் என, கோவை எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
News January 21, 2026
கோவை அருகே விபத்து: பெண் பலி!

கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரேஷன் கடை ஊழியர் கார்த்திகா. இவர் நேற்று தனது மகன், மகள், உறவினர்கள் விக்னேஷ் ராகவ், ஜோதிகுமாரியுடன், பூச்சியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்ப ஹரி என்பவரது ஆட்டோவில் பயணித்துள்ளனர். அதிவேகமாக சென்ற ஆட்டோ வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி குமாரி உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.


