News October 27, 2025
ஒரு மூத்தவனா சொல்றேன்… கேளுங்க: சீமான்

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 27, 2025
BREAKING: அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.
News October 27, 2025
IND Vs SA: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.
News October 27, 2025
TN அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக?: BJP

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


