News October 20, 2025
‘நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

பெங்களூருவில் ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் 28 பக்க தற்கொலை கடிதத்தில், ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால், மற்றுமொரு உயரதிகாரி இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாலும், சம்பளத்தை இழுத்தடித்ததாலும் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து CEO பவிஷ் மீது FIR போடப்பட்டுள்ளது. அலுவலக டார்ச்சர் இந்த அளவுக்கு இருக்குமா?
Similar News
News October 20, 2025
மிக கனமழை வெளுத்து வாங்கும்:IMD

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்.
News October 20, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த விஷால்

‘மகுடம்’ படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்ற அவர், பொறுப்பின் காரணமாக எடுக்கப்பட்டதே எனவும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கும் கடமைப்பட்டு, இப்படத்தை நிறைவாக இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரிலீஸாகியுள்ளன.
News October 20, 2025
குழந்தைகள் திக்குறாங்களா? சரி செய்ய Easy Tips

திக்குவாயை சரி செய்ய டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், இதற்கு சில பயிற்சிகளும் இருக்கிறது. ➤எழுத்துக்களை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி பழக வேண்டும் ➤மூச்சு பயிற்சி செய்வது உதவலாம் ➤வாக்கியங்களை வேகமாக படிக்கலாம் ➤பாடல்கள் பாடுவதும் உதவும். குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணலாமே!